குத்தாலத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு!
குத்தாலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பு நிலத்தை ஆக்கிரமித்திருந்தனர். அதனை போலீஸ் பாதுகாப்புடன் சென்று அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
குத்தாலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பு நிலத்தை ஆக்கிரமித்திருந்தனர். அதனை போலீஸ் பாதுகாப்புடன் சென்று அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதியில் மன்மதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உளளது. இதனிடையே கோயிலுக்கு பின்புறத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை சம்பந்தம் என்பவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தியாகராஜன் என்பவர் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், கமர்ஷியல் கட்டணத்தில் உள்ள அந்த இடத்திற்கு ரூ.14 லட்சம் வாடகை பணம் செலுத்தாததால் ஆக்கிரமிப்புகளை உடனடியாகவும் அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி கடந்த 27ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி தலைமையிலான குழுவினர், போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும், இந்த இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது எனவும் போர்டு வைத்துள்ளனர்.
Source, Image Courtesy: Dinakaran