மதுரை சுங்க சாவடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 3 பேர் - தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்குகிறதா?
மதுரை அருகே உள்ள கப்பலூரில் சுங்க சாவடியில் கட்டணம் செலுத்த முடியாது என்று கூறி மூன்று பேர் துப்பாக்கிய காட்டி மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ளது கப்பலூர் சுங்கசாவடி. அங்கு நேற்று இரவு 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்துள்ளது. கட்டணம் செலுத்துமாறு ஊழியர்கள் கூறியதும் தங்களிடம் இருந்த துப்பாக்கியை காட்டி ஊழியர்களை மிரட்டியுள்ளனர். இதனால் சுங்கசாவடி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து அவர்களை விட்டுள்ளனர். அந்த கும்பல் மதுரை நோக்கி சென்றுள்ளது.
கட்டணம்லாம் செலுத்த முடியாது... சுங்க சாவடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது #Madurai #TollGate #Arrest pic.twitter.com/f8XWTijlot
— Polimer News (@polimernews) April 21, 2022
இது பற்றி சுங்கசாவடி ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலை தொடர்ந்து அனைத்து சுங்க சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரையில் இருந்து மீண்டும் கப்பலூர் சுங்கசாவடிக்கு மர்ம கும்பல் கார் வந்துள்ளது. அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் பற்றி விசாரித்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Source, Image Courtesy: Polimer