தமிழகத்தில் 57,000 பெண்கள் மாயமா.. உரிய நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி தலைவர் வலியுறுத்தல்..
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயமானது சாதாரண விஷயம் அல்ல. அவர்களைக் கண்டுபிடிக்க மாநில அரசுகள் தீவிரம் காட்டவேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தி பேசி இருக்கிறார். அது மட்டும் கிடையாது இது தொடர்பான அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து அவர் குறிப்பிடும் பொழுது, நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயமாகியுள்ளனர்.
இதுசாதாரண விஷயமாக தெரியவில்லை. தமிழகத்திலும் சுமார் 57 ஆயிரம் பேர் மாயமாகியுள்ளனர். உடனடியாக இது தொடர்பாக தொலைந்து போன பெண் குழந்தைகளை தேடி கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கை ஒன்றை தமிழக அரசின் சார்பில் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்து இருந்தார்.
இது தொடர்பாக தமிழக காவல்துறை சார்பில் டிஜிபி குழுவை அறிவித்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார். ஏற்கனவே குழு செயல்பட்டு வருகிறது. அதன்மூலம் பல குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அந்த நடவடிக் கையை மேலும் விரிவுபடுத்தி, தொலைந்தவர்கள் பற்றிய முழு தகவலையும் வெளியிட வேண்டும். அதேபோல, காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் பணிகளை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
Input & Image courtesy: News