சர்வதேச சிலம்பம் போட்டி: 80 பதக்கங்களை குவித்து தமிழக வீரர், வீராங்கனைகள் சாதனை!
நேபாளத்தில் நடைபெற்று வந்த சர்வதேச சிலம்பம் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 52 தங்கம் உட்பட 80 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
நேபாளத்தில் 5 நாடுகளுக்கு இடையிலான சர்வதேச சிலம்பம் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றது.
இதில் தமிழகத்தில் இருந்து சென்ற வீரர், வீராங்கனைகள், 52 தங்கள் மற்றும் 17 வெள்ளி, 11 வென்கலப் பதக்கங்களை வென்றனர். இவர்கள் அனைவரும் தமிழகம் திரும்பிய நிலையில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் உற்சாகமாக வரவவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Polimer