1000 ஆண்டு பழமையான அன்னூர் மன்னீஸ்வரர் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

அன்னூர் மன்னீஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று (டிசம்பர் 17) நடைபெற்றது. இதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-12-18 12:02 GMT

அன்னூர் மன்னீஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று (டிசம்பர் 17) நடைபெற்றது. இதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவை மாவட்டம், அன்னூரில் கடந்த 1000 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த மன்னீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்களும் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே போன்று இக்கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை மிகவும் கோலாகலமாக தேராட்டமும் நடைபெறும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் மிகவும் விமர்சையாக தொடங்கியது. அதில் சிறப்பு அம்சமாக நேற்று தேரோட்டம் நடைபெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது காலை 7.45 மணிக்கு அருந்தவச் செல்வி உடனமர் மன்னீர்வரர் தேருக்கு எழுந்தருளினார். காலை 10.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வந்தனர். அருந்தவச் செல்வி உடன் அமர்ந்து மன்னீஸ்வரர் தேர் பவனி வந்தது. இத்தேர் தர்மர் கோயில் வீதி, சக்தி ரோடு, மெயின் ரோடு உள்ளிட்ட வழியாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மன்னீஸ்வரரை தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Dinamalar

Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News