12 கோடி ரூபாய் நிலத்தை அபகரித்த பாதிரியார்! முதல்வரிடம் புகார் அளித்துவிட்டு காத்திருக்கும் அப்பாவிகள்!
சென்னை: ஜெபக்கூட்டம் நடத்துவதற்காக, வாடகைக்கு பெற்ற நிலத்தை, சட்டத்திற்கு புறம்பாக உரிமையாளரிடமிருந்து, பாதிரியார் ஒருவர் அபகரித்துள்ளார்.
சென்னை சோலையூரில் வசித்து வருபவர் கோதண்டராமன். ஓட்டேரியில் தனக்குச் சொந்தமான 8,063 சதுர அடி நிலத்தை, தன் மகன்கள் சரவணபெருமாள், தனஞ்செயன், தனசேகர், தசரதன் ஆகியோருக்கு எழுதி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், 1980'இல் அந்த இடத்தை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த சேர்ந்த பாதிரியார் ஜான் வெங்கடேசன் என்பவர், ஜெபக்கூட்டம் நடத்துவதற்காக வாடகைக்கு பெற்றார். பின்பு அந்த இடத்தை முழுவதுமாக பாதிரியார் அபகரித்துக் கொண்டார்.
இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர்கள் பலமுறை காவல்துறையிடம் புகார் அளித்தும், காவல்துறை பாதிரியார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக நிலத்தின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.
தலைமைச் செயலர், உள்துறை செயலர், முதல்வர் சிறப்பு அதிகாரி மற்றும் டி.ஜி.பி என அனைத்து உயர்மட்ட அதிகாரிகளுக்கும், இப்பிரச்சனை குறித்து நிலத்தின் உரிமையாளர்கள் மனு அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
வேதனையின் உச்சிக்கே சென்ற நிலத்தின் உரிமையாளர்கள், நேற்று முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம் நோக்கி முட்டி போட்டபடியே நகர்ந்து வந்து மனு அளித்தனர்.
அனைத்து உயர்மட்ட அதிகாரிகளுக்கும் மனு அளித்தும், எந்த ஒரு பயனும் இல்லாத நிலையில், நில உரிமையாளர்கள் தற்போது முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு மனு அளித்துள்ளதால், இப் பிரச்சனைக்கு முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.