16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்! தி.மு.க கிளைச் செயலாளர் போக்சோ சட்டத்தில் கைது!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில், 16 வயது சிறுமியை தி.மு.க பிரமூகர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வலையன்குளம் பகுதி தி.மு.க செயலாளராக இருப்பவர் 'வீரணன்'. இவர் ரேடியோ செட் அமைத்து தொழில் செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் தாயையிழந்த 11ஆம் வகுப்பு சிறுமிக்கு, ஆன்லைன் வகுப்பிற்கு உதவி என்ற பெயரில் 'சிம் கார்டடு' வாங்கிக் கொடுத்துள்ளார்.
பின்னர் அச்சிறுமியிடம் அவரை திருமணம் செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். பின்னர் அச் சிறுமியை பாலியல் வண்கொடுமை செய்துள்ளார்.
இதனை அறிந்த சிறுமியின் தந்தை திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து வீரணன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.