வளரி வீரன் கல்சிற்பம் - 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

வளரி வீரன் நடுக்கல் சிற்பம் கல்லுப்பட்டி அருகே கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

Update: 2022-09-22 02:30 GMT

மதுரை மாவட்டத்தில் T. கல்லுப்பட்டி அருகே உள்ளது தான் டி. குன்னத்தூர். இங்குதான் தற்பொழுது 16ஆம் நூற்றாண்டில் சேர்ந்த நடுக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்று துறை தலைவரும் மற்றும் பாண்டியநாடு பன்னாட்டு தலைமை தொல்லியல் கள ஆய்வாளருமான முனிஸ்வரன் தலைமையில் பேராசிரியர் முனைவர் லட்சுமண மூர்த்தி, ஆய்வாளர்கள் ஆனந்த குமாரன் நேற்று குன்னத்தூர் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர்.


அப்பொழுது 16ஆம் நூற்றாண்டில் சேர்ந்த பலரின் வீரன் கல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பேராசிரியர் கூறுகையில், வளரி என்பது பண்டைய காலத்தில் தமிழர்களின் பயன்படுத்தப்படும் ஒரு வகை ஆயுதம். குறிப்பாக கால்நடைகளை திருடி செல்லும் திருடர்களை பிடிப்பதற்கும், போர்க்களத்தில் பயந்து ஓடி தப்பிப்பவர் களை பிடிப்பதற்கும் வளரியை பயன்படுத்தினார்கள். வளரியை கால்களுக்கு குறி வைத்து சுழற்றி வீசுபொழுது பிடிப்படுவார்கள். இந்த வளரிக்கு வெவ்வேறு பெயர்களும் உண்டு.


 சிற்பம் வளரி வீரன் என்பதற்கு சான்றாக நடுப்பகுதியில் உள்ள வீரன் கையில் வேலை பிடித்த மாதிரி, இடது கையில் வளரியை பிடித்த வாரம் இடது காலில் சற்று சாய்ந்து முழங்கால் தெரியும் படி சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. இந்த சிற்பம் வளரி வீரரின் சிற்பம் என்று அழைக்கப் படுகிறது. வீரன் வலது புறத்தில் பெண் சிற்பம் அணிகளின் அணிந்த அலங்காரத்துடன் காணப்படுகிறது. இரண்டு பெண் சிற்பமும் ஆடை அலங்காரத்துடன் காணப்படுவது. இந்த சிற்பத்தை பார்க்கும் பொழுது வளரி வீரன் இறந்த பிறகு இரண்டு பேரும் உடன்கட்டை ஏறியதற்கு சான்றாகவும் அறிய முடிகிறது என்று அவர் கூறுகிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News