1526 கோடி மதிப்புள்ள 218 கிலோ ஹெராயின் லட்சத்தீவு பகுதியில் பறிமுதல் - தீவிரமாகும் போதை பொருள் வேட்டை

Update: 2022-05-21 13:05 GMT

கன்னியாகுமரி மாவட்டம், சின்னத்துறை மற்றும் வள்ளவிளை சார்ந்த இரண்டு விசைப் படகுகளில் இருந்து ரூ.1,526 கோடி மதிப்புள்ள ஹெராயின் லட்சத்தீவு கடல் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டதாக குமரி மீனவர்கள் உட்பட 20 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டி.ஆர்.ஐ. மற்றும் ஐ.சி.ஜி. இணைந்து கூட்டு சோதனையில் ஈடுபட்டது. அப்போது லட்சத்தீவு கடற்பகுதியில் சர்வதேச சந்தையில் ரூ.1,526 கோடி மதிப்புள்ள மொத்தம் 218 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், இதற்கு என்று ஆபரேஷன் கோஜ்பீன் என்கின்ற பெயரில் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம், வள்ளவிளை பகுதியை சேர்ந்த விஜயன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பதுக்கி வைக்கப்பட்ட ஹெராயின் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் தொடர்புடையதாக குமரி மீனவர்கள் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டு கொச்சி துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மீனவர்கள் படகில் ஹெராயின் கடத்தப்பட்ட சம்பவத்தில் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்கின்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News