உக்கடம் மதுரைவீரன் கோயிலில் தங்க காசுகள், வாளை திருடிய 3 பேர் அதிரடி கைது!
கோவை மாவட்டம், உக்கடத்தில் அமைந்துள்ள மதுரைவீரன் கோயிலில் தங்க காசுகள் மற்றும் வாளை திருடிச் சென்ற 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கோவை, உக்கடம், சி.எம்.சி., காலனியில் மதுரைவீரன் பட்டத்தரசி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க காசுகம் மற்றும் சுவாமியின் வாள் திருடுபோயிருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து விசாரணை செய்ததில் நவீன், விக்கி என்ற விக்ர மார்த்தாண்டன், குட்டி என்கின்ற பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Source, Image Courtesy: News 18 Tamilnadu