வெளிமாநிலங்களில் இருந்து 60 டன் வெண்ணெய் வாங்கும் நிலைமை: வேடிக்கை பார்க்கும் ஆவின் நிறுவனம்?

நெய் தட்டுப்பாடு காரணமாக தற்பொழுது மகாராஷ்டிராவில் இருந்து 60 டன் வெண்ணெய் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

Update: 2023-03-06 01:32 GMT

தமிழக முழுவதும் குறிப்பாக ஆவின் நிறுவனத்தின் நெய்க்கு என்று பல்வேறு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் ஆவின் நிறுவனத்தின் நெய்யின் விலை மற்ற தனியார் நிறுவனங்களின் விலையை விட சற்று குறைவாகவே இருக்கிறது. மக்கள் வாங்கும் அளவிற்கு தரத்தில் உயர்ந்ததாகவும் விலையும் குறைவாக இருந்த காரணத்தினால் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. ஆனால் தற்பொழுது ஆவின் பாலுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக நெய் முற்றிலும் தயாரிப்பானது நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தற்பொழுது சிரமத்திற்கு உள்ளாக இருக்கிறார்கள்.


பல்வேறு வாடிக்கையாளர்கள் இருந்த நிலையில் அவர்கள் தற்பொழுது தனியார் நெய்களை வாங்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இதற்காக சுமார் 60 டன் வெண்ணெய் மகாராஷ்டிராவில் இருந்த தமிழகத்திற்கு குறிப்பாக மதுரைக்கு வந்து இருக்கிறது. தமிழக ஆவின் நிறுவனத்தில் ஒரு நாளைக்கு 40 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் பால்களை மதுரை ஆவின் கொள்முதல் செய்கிறது.


முன்பு இருந்ததைப் போல் அல்லாமல் தற்பொழுது பால் பற்றாக்குறை இருப்பதன் காரணமாக மீதம் இருக்கும் பாலை வெண்ணெய் தயாரிப்புக்கு மாற்ற முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மதுரை ஆவின் உற்பத்தி நிலையத்தில் நெய் தயாரிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டு இருக்கிறது இதனால் தான் வெளிமாநிலங்களில் இருந்து நாம் தற்பொழுது 60 டன் வெண்ணெய்யை வாங்கி இருக்கிறோம்.

Input & Image courtesy: Hindu News

Tags:    

Similar News