டாக்டர் சுப்பையாவிற்கு ஜாமீன்: சட்ட பிரிவை மாற்றியது ஏன்? தி.மு.க. அரசுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்!

Update: 2022-03-21 11:01 GMT

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த டாக்டர் சுப்பையாவுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தவறுதலான செயலுக்காக டாக்டர் சுப்பையா மீது வழக்கு பதியப்பட்டது. இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் பள்ளி மாணவி ஒருவர் மதமாற்றத்தால் உயிரிழந்தார். இதற்காக ஏபிவிபி அமைப்பு நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலின் வீடு முன்பாக போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் ஏபிவிபி அமைப்பு நிர்வாகிகளை டாக்டர் சுப்பையாவா சிறைக்கு சென்று சந்தித்து ஆறுதல் அளித்தார். இதனை ஒரு காரணமாக வைத்துக்கொண்ட திமுக அரசு டாக்டர் சுப்பையா மீது பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்கை மாற்றியமைத்து கைது செய்தது.

இந்நிலையில், ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் சுப்பையா மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று நீதிபதி ஜெயசந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி டாக்டர் சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி இந்த வழக்கில் கடந்த 2 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றம் இல்லாதபோது எப்படி சட்டப் பிரிவுகளை மாற்றியமைத்தீர்கள் என திமுக அரசு மீது கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து டாக்டர் சுப்பையாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். திமுக அரசு அமைந்த பின்னர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: One India Tamil

Tags:    

Similar News