ராணுவ ஹெலிகாப்டர் விபத்து! விசாரணைக்கு விமானப்படை உத்தரவு!
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விமானப்படை மற்றும் ராணுவம் தரப்பில் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.;
இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.17வி5 ரக ஹெலிகாப்டரில் ராணுவ முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது வானிலை கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது.
இதில் பலர் தீக்காயங்களுடன் சிதறிக்கிடந்தனர். ஒரு சிலரை மற்றவர்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விமானப்படை மற்றும் ராணுவம் தரப்பில் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Source: Maalaimalar
Image Courtesy: Twiter