விவசாய கிணறு அபகரிப்பு: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயற்சி!

Update: 2022-04-05 10:16 GMT

போலி ஆவணங்களை தயார் செய்து அதன் மூலம் விவசாய கிணற்றை அபகரித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஏப்ரல் 4) குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று கொண்டிருந்தது. மனு அளிக்க வந்த தாய், மகள் இருவரும் தங்களது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வானூர் அருகே அம்புலுக்கை கிராமத்தை சேர்ந்த வைகுண்டவாசன் மனைவி சரஸ்வதி 48, அவரது மகள் கீர்த்தனா என தெரியவந்தது. தற்கொலை செய்ய ஏன் வந்தேன் என்று சரஸ்வதி கூறும்போது, எனது கணவர் பெயரில் இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை வைத்து விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றோம். விவசாய நிலத்தில் கிணறு ஒன்று உள்ளது. அதில் தனது கிணற்றுக்கு மின்மோட்டார் மற்றும் மின்இணைப்பு வாங்கித்தருவதாக கூறி அவர் போலி ஆவணங்களை தயார் செய்து கிணற்றை அவரது பெயருக்கு பட்டா மாற்றிக்கொண்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து கிணற்றை மீட்டுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinakaran

Tags:    

Similar News