கோவில் விவகாரத்தில் மதுரை நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு!
முதல் மரியாதை யாருக்கு கிடைத்தது? என்பது தொடர்பான வழக்கில் நீதிபதிகளின் புதிய உத்தரவு.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குலமங்கலம் பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவர் தான் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். குறிப்பாக இந்த மனுவில் அவர் கூறுகையில், எங்கள் ஊரில் பாரம்பரிய மிக்க உடையபராசக்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவின் போது எங்கள் ஊரில் குறிப்பிட்ட சில நபர்களுக்கும், எங்கள் ஊருக்கே தொடர்பு இல்லாத வேலை பணியூர் கிராமத்தை சேர்ந்து சில தனிநபர்களுக்கும் முதல் மரியாதை தரவேண்டும் என்று தங்களுக்குள் தகராறு செய்வதை பல ஆண்டு காலமாக தொடர்ந்து வருகின்றனர். பிரச்சனை காரணமாக 30 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.
இந்த சூழ்நிலையில் அமைதியான முறையில் இந்த ஆண்டு திருவிழா நடத்த திட்டமிட்டலும் அதன்படி கொடியேற்றம் கடந்த பத்து நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா வருகிற 22 ஆம் தேதி நிறைவு பெறுகின்றன. 21ஆம் தேதி தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இதில் எங்கள் ஊரைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு நடத்த திட்டமிட்டு உள்ளோம். கோவில் திருவிழாக்களில் இறைவன் முன்பு அனைவரும் சமம் என்று கொள்கை உடன் அமைதியான முறையில் தேரோட்டம் அடைவதற்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், முதல் மரியாதை வழங்கப்படாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறுகிறார்.
இந்த விசாரணை முடிவில் நீதிபதிகள், இறைவன் மட்டும் வழிபடுவதற்கு தகுதியானவன். இறைவன் முன்பாக அனைவரும் சமம் தான். இறைவனின் முன்பு யாருக்கும் இடம் கிடையாது என்று குறிப்பிடும் திருவிழாவை நடத்தலாம் என்று வழக்கை ஒத்தி வைத்தனர்.
Input & Image courtesy: News