மத்திய அரசின் சிந்தனை அமர்வு மாநாடு: நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத தமிழக முதலமைச்சர், ஏன்?
மத்திய அரசாங்கத்தின் சார்பாக சிந்தனை அமர்வு மாநாட்டு இரண்டு நாட்களாக நடைபெறுகிறது, இதில் பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் இருந்து நான்கு முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை.
Lவிஷன் 2047 உள்துறை அமைச்சர்களின் மாநாடு:
அரியானா மாநிலம் சூரஜ் குண்ட நகரில் மத்திய உள்துறை அமைச்சர்களின் சிந்தனை அமர்வு மாநாட்டை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இரண்டு நாள் நடைபெற்ற இந்த மாநாட்டின் நோக்கம் பிரதமர் மோடி தனது சுதந்திர முறையின் போது அறிவித்த "விஷன் 2047" என்னும் இந்திய நூற்றாண்டு சுதந்திர நூற்றாண்டின் தொலைநோக்கு பார்வையும், பஞ்சபிரான் என்னும் ஐந்து உறுதிமொழிகளையும் செயல்படுத்துவதற்கான செயல் திட்டத்தையும் உருவாக்குவது ஆகும். இந்த மாநாட்டை மாநாட்டில் சைபர் கிரைம் மற்றும் தடுப்பு மேலாண்மைக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல், போலீஸ் படைகளை நவீனமயமாக்கல், குற்றவியல் நீதி அமைப்பியல், தகவல் தொடர்பு நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரித்தல், நிலை எல்லை மேலாண்மை மற்றும் கடலோர பாதுகாப்பு உள்ளிட்ட உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்த மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார். அப்பொழுது அவர் கூறுகையில், நமது அரசியலமைப்பின்படி சட்டம் ஒழுங்கு என்பது மாநிலத்தின் கையில் தான் உள்ளது. எல்லை தாண்டிய மற்றும் எல்லையில்லா குற்றங்களுக்கு எதிராக அனைத்து மாநிலங்களும் ஒன்றாக உட்கார்ந்து இதைப் பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும். அது காஷ்மீரோ, அல்லது வடகிழக்கு மாநில பிரச்சினைகளோ, அல்லது போதைப்பொருள் கடத்தலாகவோ இருந்தாலும் மோடி அரசு வெற்றியை பதிவு செய்ய அனைவரின் ஒத்துழைப்பு இருந்தாக வேண்டிய அவசியம் இருக்கிறது.
எல்லா மாநிலங்களும் NIA அலுவலகங்கள் தேவை:
எல்லா மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அலுவலகங்கள் இருக்க வேண்டும். இது பயங்கரவாத தடுப்பு யுக்தியாகும். நம் உள்நாட்டு பாதுகாப்பு வலுவாக உள்ளது 35 ஆயிரம் போலீஸ் மற்றும் மத்திய ஆயுதப்படை நம் நாட்டின் ஒற்றுமைக்காக ஒருங்கிணைப்புக்காக பாடுபட்டு இன்னுயிரை தந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த மாநாட்டில் பாஜக ஆளாத மாநிலங்களின் உள்துறை பொறுப்பை வகிக்கிற 4 முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக அவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் மேற்கு வங்காள மம்தா பானர்ஜி மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த நிதிஷ்குமார், ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் ஆகியோர் அவர்கள். அதே நேரத்தில் பாஜக ஆளாத மாநிலங்களான பஞ்சாப் முதல் அமைச்சர் பகவத் மானும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Oneindia News