பாரதிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை -நிர்மலா சீதாராமன் வேதனை !

Breaking News.

Update: 2021-09-13 04:15 GMT

பாரதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பாரதி குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கருத்துகளை கூறியுள்ளார்.

பாரதியார் பற்றி அவர் கூறும் போது, பாரதி வெறும் விடுதலை பற்றி மட்டும் பேசவில்லை. பெண்விடுதலை, சமத்துவம், உள்நாட்டு உற்பத்தி என பல விஷயங்களை பற்றியும் அவர் பேசியுள்ளார்.

தற்போதுள்ள சூழலில் பாரதியின் வரிகள் அனைத்தும் பொருந்தியுள்ளது. குறிப்பாக பாரதி பெண் உரிமை மற்றும் பெண்களின் சக்தி பற்று அதிகம் பேசியுள்ளார்.

ஆனால் பாரதிக்கு இதுவரை உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என தெரிவித்தார். 1945 ஆம் ஆண்டு கல்கி தான் எட்டையபுரத்தில் மணிமண்டம் கட்டும் பணியை தொடங்கினார் ராஜாஜி அதனை திறந்து வைத்தார்.

ஆனால், அன்றிலிருந்து இன்று வரை பாரதிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. பாரதியை இங்கு அங்கீகரிக்க கொண்டாட பல காலம் பிடித்தது. இனியாவது பாரதிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்

Source: News 18 Tamil

Tags:    

Similar News