மண்ணிற்கு பெருமை சேர்க்கும் ஆயுதபூஜை வழிபாடு: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

கொலு வைத்து அலைமகளையும் கலைமகளையும் மலைமகளையும் அனைத்து தெய்வங்களுக்கும் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியையும் வழிபடும் புனிதமான நவராத்திரி திருநாளில் விஜயதசமி, ஆயுதபூஜை நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன்.;

Update: 2021-10-14 10:46 GMT

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக.. குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக.. என்று தாய்மார்கள் எல்லாம் தங்கள் இல்லத்தில்.. நவநாட்கள் மங்கலக் சடங்குகள் செய்து.. கொலு வைத்து அலைமகளையும் கலைமகளையும் மலைமகளையும் அனைத்து தெய்வங்களுக்கும் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியையும் வழிபடும் புனிதமான நவராத்திரி திருநாளில் விஜயதசமி, ஆயுதபூஜை நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன்.

இனம், மொழி, மதம், சமூகம், சமுதாயம், பாகுபாடுகள் இன்றி எல்லா சிறு குறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் அதன் தொழிலாளர்களுடன் கொண்டாடும் ஆயுத பூஜை தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்க்கும் வழிபாடாகும். உயிர்களிடத்தில் மட்டுமில்லாமல் தொழில் நடத்த தேவையான கருவிகளுக்கும் கூட நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழர்கள் கடைபிடிக்கும் மரபு ஆயுத பூஜை. வணிகர்களும் வியாபாரிகளும், வேறுபாடுகள் பாராமல் மகிழ்ந்து கொண்டாடும் மகத்தான பண்டிகை ஆயுதபூஜை. இந்த அற்புதமான தருணத்தில் வளங்கள் பெருக்கி பொருளாதார சுணக்கங்கள் நீங்கி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வோம். 


கல்விக்கூடங்கள் எல்லாம் முழுமையாகச் செயல்பட முடியாமல், வகுப்புகளும், பாடப் புத்தகங்களும் எல்லாம் கணினிக்குள்ளும்.. அலை பேசிக்கொள்ளும் அடங்கிக் கிடக்கும் இந்த காலகட்டத்தில், வழக்கம் போல பள்ளி திறக்குமா? பாடங்கள் முறையாக நடக்குமா? உரிய தேர்வுகள் நடக்குமா? என்ற கேள்விக்குறியுடன், மாணவர்கள் காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். அன்னை கலைவாணியின் அருள் பெற்று, மாணவர்கள் சிறப்பாக கல்வி, கற்கவும், தொழில் வளம் பெருகி, வணிக வியாபாரம் தழைக்கவும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Bjp Tn President Statement

Tags:    

Similar News