தமிழகத்தில் இந்து கோவில் மீது மீண்டும் ஒரு தாக்குதல்-சிலையை உடைத்து அட்டூழியம்!

கோவில் வளாகத்தின் முன்பகுதியில் உள்ள நவக்கிரக சிலைகளில் கேது, சூரியன், புதன் உள்ளிட்ட 5 சிலைகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2021-08-21 05:31 GMT

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் ஒருவர் சேலம் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் உள்ள 5 சிலைகளை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி ஆத்துக்காடு பகுதியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இன்று காலை பொதுமக்கள் வழிபாடு நடத்த சென்றனர். அப்போது கோவில் வளாகத்தின் முன்பகுதியில் உள்ள நவக்கிரக சிலைகளில் கேது, சூரியன், புதன் உள்ளிட்ட 5 சிலைகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் உதவி ஆணையாளர் ஆனந்த்குமார் தலைமையிலான கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது வேம்படிதாளம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் சாமி சிலைகளை உடைத்தது தெரியவந்தது. சதீஷ் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத விரக்தியில் இருந்து வந்ததாகவும் இதனால் கோவில் சிலைகளை உடைத்ததாகவும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமணம் ஆகாத விரக்தியில் கோவிலில் உள்ள சிலையை உடைத்தாரா அல்லது கிறிஸ்தவ மிஷனரிகளின் பிடியில் சிக்கிக்கொண்டு சாமி சிலைகளை உடைத்தாரா என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் இந்து கோவில்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில் கோவில்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அனைத்து கோவில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Source : One India

Tags:    

Similar News