சென்னையில் பயங்கரம்: குடிசை மாற்று வாரிய குடியிருப்பு தரைமட்டம்!
சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் உயிர் சேதம் பற்றி இன்னும் தெரியவில்லை. மீட்புபணிகள் நடைபெற்ற பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது.

சென்னை, திருவொற்றியூர் கிராமத்தெருவில் 24 வீடுகள் கொண்ட 'டி பிளாக்' உள்ளது. அந்தக் கட்டிடத்தில் நேற்று (டிசம்பர் 26) இரவு திடீரென்று விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதில் வசித்து வந்த மக்கள் அனைவரும் வெளியேறத் தொடங்கினர்.
இந்நிலையில், இன்று காலை (டிசம்பர் 27) திடீரென்று சீட்டுகட்டு போல கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் யாரேனும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என்று தீயணைப்புத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளில் இருந்து அனைவரும் வெளியேறிய பின்னரே கட்டிடம் இடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் முழுமையான மீட்புபணிகள் முடிந்த பின்னர்தான் தெரியும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Source: Dinamalar
Image Courtesy: Vikatan