உத்தரவுகளை மதிப்பதில்லை தமிழக அதிகாரிகளை சிறையில் தள்ளுவதே முதல் நோக்கம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை மதிக்காமல் இருக்கும் அரசு அதிகாரிகளை சிறையில் அடைப்பதே முதல் கட்ட வேலையாக இருக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, திருவொற்றியூரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளது. அதனை இடிக்க மாநகராட்சி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை எதிர்த்து வழக்கம் தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், ட்ரோன் மூலம் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அது மட்டுமின்றி கடமையை சரிவர செய்யாத அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என எச்சரிக்கையும் விடுத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரிக்க கோரிய மனுதாரர்களுக்கு 50 ஆயிரம் அபராதம் விதித்தனர். அந்த தொகையை மேட்டூரில் இயங்கும் சுடரொளி சமூக சேவை அறக்கட்டளைக்கும், திருவேற்காட்டில் பசு மடத்துக்கும் பகிர்ந்து அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்தனர். நீதிமன்ற எச்சரிக்கை பின்னராவது அதிகாரிகள் திறம்பட செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Source, Image Courtesy: Polimer