தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரி போராடிய மக்களை அடித்தே விரட்டிய தி.மு.க-வினர்! நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு இதெல்லாம் தேவை தானா?

சென்னை மந்தவெளி பகுதியில், குளம் போல தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அப்பகுதி திமுகவினர் தாக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-11-12 12:17 GMT

சென்னை மந்தவெளி பகுதியில், குளம் போல தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அப்பகுதி திமுகவினர் தாக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 25ம் தேதி முதல் தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே போன்று சென்னையில் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் சுமார் 300க்கும் மேற்பட்ட தெருக்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

தெருக்களில் காணும் இடமெல்லாம் வெள்ளக்காடாக இருந்தது. இதனால் சுமார் 513 தெருக்கள் வெள்ளநீரில் மூழ்கியது. அந்த தெருக்களில் குடியிருந்த பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெள்ளத்தில் தவிக்க நேரிட்டது.

மழை வெள்ளம் அதிகமாக ஓடிய தெருக்களில் மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. தண்ணீர் தேங்கிய 500க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 125 இடங்களில் தண்ணீரை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் அப்புறப்பத்தினர். மீதமுள்ள 300 இடங்களில் மழைநீர் அகற்றுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை மந்தவெளி செயிண்ட் மேரிஸ் சாலை பகுதியில், தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டி, அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை கண்டு கோபமுற்ற அப்பகுதி திமுகவினர் சிலர் போராட்டத்தை கலைத்துவிட்டு செல்லுமாறு மக்களை அறிவுறுத்தியதாக தெரிகிறது.

அதிகாரிகள் வரும் வரையில் போராட்டத்தை கைவிடமாட்டோம் என மக்கள் உறுதியாக கூறியுள்ளனர். இதனால் மந்தவெளி பகுதி திமுகவினர் சிலருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பு வரை சென்றதாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் இந்த மோதலை தடுத்து நிறுத்தி இருதரப்பையும் சமாதானம் செய்து நிலைமையை சுமூகமாக்கினார்.




Similar News