"சந்திர சூரியர் உள்ளவரைச் செல்லும்"..காஞ்சியில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Update: 2022-06-17 07:50 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்துக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்வஸ்தஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டானது ராஜராஜ சோழனின் 14 ஆம் ஆட்சியாண்டில் காஞ்சியில் உரையும் ஆளுடையார் கரைகண்டீசுவரமுடைய நாயனார்க்கு நில தானம் வழங்கிய செய்தியைக் குறிப்பிடுகிறது.

பிருத்திவிகங்கனான நிலைட்ட பெருமான் என்பவர் கரைகண்டீசுவரம் உடையார் கோயிலுக்கு வடக்கில் உள்ள கொல்லையைத் தேவதானமாகத் தந்துள்ளார் என்பது தெரிய வருகிறது. இத்தானம் சந்திர சூரியர் உள்ளவரைச் செல்லும் என்றும் அதனை பாழ்படுத்துபவர் கங்கையில் உள்ள பசுவைக் கொன்ற பாவத்திற்க்கு ஆளாவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது 13ம் நூற்றாண்டில் சோழர் ஆட்சியின் கடைபகுதியில் கி.பி 1216-1246 வரை ஆண்ட மூன்றாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டு என்பது உறுதியாகிறது. அவனின் பதினான்காம் ஆட்சியாண்டு கல்வெட்டு என்பதால் இக்கல்வெட்டின் காலம் கி.பி 1230 ஆகும்.

மூன்றாம் ராஜராஜன் ஆட்சிக் காலத்தில் சோழ பேரரசு பல்வேறு தாக்குதல்களாலும் , அரசியல் சூழல்களாலும் வலிமை குன்றி இருந்த நிலையிலும் , கோவில்களுக்கான தானம் தொடர்ந்து நடைபெற்றுள்ளது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. 

Input From: Oneindia 



Similar News