கோவை குற்றாலம் இன்று முதல் திறப்பு! வெளியூர் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு!

கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த கோவை குற்றாலம் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக கடந்த 4 மாதங்களாக கோவை குற்றாலம் மூடப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த 6ம் தேதி மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து அதிகம் காரணமாக சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

Update: 2021-09-20 05:34 GMT

இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்திருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகைக்கு மீண்டும் தடை போடப்பட்டது. இந்த தடை உத்தரவால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பி செல்லும் காட்சியை காணமுடிந்தது. தற்போது நீர்வரத்து குறைந்திருப்பதால் கோவை குற்றாலம் இன்று மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஆன்லைன் வாயிலாக சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று வனத்துறை அறிவித்துள்ளது. வெளி மாநில சுற்றுலாப்பயணிகள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும், அல்லது ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை சான்று எடுத்து வருவது அவசியம் என கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: News7

Tags:    

Similar News