நாளைக்குள் இதெல்லாம் என் டேபிளுக்கு வந்தாகணும்! மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் போட்ட உத்தரவு!

Collectors to table report on encroachments by December 4

Update: 2021-12-03 11:33 GMT

நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் குறித்த விரிவான அறிக்கையை டிசம்பர் 4-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் வ.இறை அன்பு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் குறித்த அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலெக்டர்கள் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் தலைமை செயலர் பிறப்பித்த உத்தரவில், ''நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்கள், நீர்நிலைகளின் வரைபடங்கள், ஏற்கனவே அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்கள், தடை உத்தரவுகளை சேகரித்து கலெக்டர்கள் அனுப்ப வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்கள், ஆக்கிரமிப்பாளர்களுக்கான மாற்று இடங்களின் பட்டியலை டிசம்பர் 4ம் தேதிக்குள் வருவாய்த்துறை செயலரிடம் தெரிவிக்க வேண்டும்.

டிஆர்ஓக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கலெக்டர்கள் 24 மணி நேரமும் தகவல்களை சேகரித்து, ஆக்கிரமிப்புகள் குறித்த தெளிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்துள்ள சிட்லப்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த, நீதிமன்ற உத்தரவு தொடர்பாக நவம்பர் 2 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியருடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தி, டிசம்பர் 1-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்ததாக அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar News