கல்லூரி திறப்பு ! மாணவர்கள், பேராசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

செப்டம்பர் 1ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி முதல் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Update: 2021-08-24 07:51 GMT

செப்டம்பர் 1ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி முதல் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், கல்லூரிகள் திறந்த பின்னர் எப்படி செயல்பட வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி கல்லூரி திறப்பதற்கு ஒரு வார காலத்துக்கு முன்னரே கல்லூரி வளாகத்தை சுத்தப்படுத்தி, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகளே தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.அது மட்டுமின்றி மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்.

அப்படி போடாத பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர் என கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: News 7

https://news7tamil.live/college-open-government-release-guidelines.html

Tags:    

Similar News