புகார் கொடுக்க வந்த பெண்ணை மாட்டுக்கறி சமைத்துவர சொன்ன எஸ்.ஐ. மீது புகார்!

Update: 2022-03-23 11:58 GMT

புகார் கொடுப்பதற்காக வந்த பெண்ணை மாட்டுக்கறி சமைத்து வர சொன்ன சிறப்பு எஸ்.ஐ. மீது காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பெண் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், ஆவினங்குடி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணியாற்றி வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவரிடம் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் தகாத முறையில் பேசியதை கண்டித்து அவரது தாயார் சிறப்பு எஸ்.ஐ.யுடன் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில் புகார் கொடுப்பதற்காக வந்த பெண்ணிடம் மாட்டுக்கறி சமைத்து எடுத்து வரச்சொல்லியதாகவும் மற்றும் தவறுதலாக பேசியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Similar News