வண்டலூர் பூங்காவில் சிங்கம் மரணம் எதிரொலி.. திருச்சியில் 6 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை.!

திருச்சியில் யானைகள் மறுவாழ்வு முகாமில் உள்ள 6 யானைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சளி மாதிரிகள் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Update: 2021-06-12 11:16 GMT

திருச்சியில் யானைகள் மறுவாழ்வு முகாமில் உள்ள 6 யானைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சளி மாதிரிகள் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சென்னை அடுத்துள்ள வண்டலூர் வனஉயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதில் சிங்கம் இறக்கவும் நேரிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள வனத்துறையின் பராமரிப்பில் உள்ள வனவிலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு முகாமில் உள்ள மலாச்சி, இந்து, சந்தியா, ஜெயந்தி, கோமதி, ஜமீலா உள்ளிட்ட 6 யானைகளுக்கும் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையில் கோவையை சேர்ந்த கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான குழுவினர் யானைகளின் சளி மாதிரிகளை சேகரித்து, அதனை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News