ஆசிரியைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை: ஜாகீர் உசேன் மீது நடவடிக்கை எடுப்பது எப்போது?
நடன ஆசிரியை அழைத்து பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் மீது பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கலை பண்பாடு துறையின் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக ஜாகீர் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஆய்வு என்ற பெயரில் அரசு இசைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்து வருகிறார். அதன்படி கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியை கலை, பண்பாட்டு துறை இயக்குனருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நான் பாரம்பரிய இசை குடும்பத்தைச் சேர்ந்தவர், தற்போது அரசு இசைப் பள்ளியில் பணியாற்றி வருகிறேன். கடந்த பிப்ரவரி 28ம் தேதி காலை அறிவுரைஞர் ஜாகீர் உசேன் எங்கள் பள்ளிக்கு ஆய்வுக்காக வந்திருந்தார். அப்போது தன்னை மட்டும் தலைமை ஆசிரியை அறைக்கு வரசொல்லி கதவை மூடிக்கொண்டார்.
மனித உருவில் உள்ள இந்த மிருகம் ஜாஹிர் உசைன் கைது செய்யப்படும் வரை Retweet செய்யவும் pic.twitter.com/URo58TQifJ
— H Raja (@HRajaBJP) April 2, 2022
அப்போது எனது தோள்பட்டை மேல் கை வைத்துக்கொண்டு, இடுப்பின் மீது கைகளை மடக்கி இப்படிதான் நடமாட வேண்டும் என்று அநாகரீகளாக நடந்து கொண்டார். மேலும், ஏப்ரல் மாதம் மூன்று நாட்கள் பயிலரங்கம் நடத்துகிறேன். அப்போது நீங்கள் அனைவரும் நடனமாட வேண்டும் என்று தரக்குறைவாக பேசினார். இது மனதளவில் மிகப்பெரிய பாதிப்பையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தற்கொலை செய்யும் அளவிற்கு செல்ல முடிவு எடுத்தேன் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதே போன்று சிவகங்கை மாவட்டத்திற்கு ஆய்வுக்காக சென்றபோதும் அங்கு ஒரு ஆசிரியைக்கு தொல்லை கொடுத்தாக ஜாகீர் உசேன் மீது புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், பாஜக தேசிய பொறுப்பாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மனித உருவில் உள்ள இந்த மிருகம் ஜாகீர் உசேன் கைது செய்யப்படும் வரை ரீ ட்விட் செய்யவும் என குறிப்பிட்டுள்ளார்.
Source:Asianetnews
Image Courtesy: Vikatan