வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் 5 நாட்களுக்கு மழை !
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனால் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Puthiyathalamurai
https://www.puthiyathalaimurai.com/newsview/114925/Depression-formed-in-the-Bay-of-Bengal