விழுப்புரம் தோண்ட தோண்ட 1,200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால சிற்பங்கள் - என்ன கிடைத்தது?
விழுப்புரம் மாவட்டம், நன்னாடு என்ற கிராமத்தில் வரலாறு பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் தலைமையிலான குழுவினர் ஒரு கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூத்ததேவி மற்றும் லகுலீசர் சிற்பங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வாளர் செங்குட்டுவன் கூறும்போது, நன்னாடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் முனீஸ்வரன் என்ற சாமி வைக்கப்பட்டு வணங்கி வருகின்றனர்.
அந்த சிற்பங்கள் பாதிக்கும் மேலாக மண்ணில் புதைந்த நிலையில் இருந்தது. இதன் முன்பாக மண்ணை அகற்றி பார்த்தபோது, வடமொழியில் ஜேஷ்டா என்று அழைக்கப்படும் மூத்தாதேவி சிற்பம் கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்த சிற்பத்தில் மகன் மாந்தன் மற்றும் மகள் மாந்தி ஆகியோருடன் அமர்ந்த நிலையில் அழகான காட்சி கொடுக்கின்றார்.
அதில் மூதாதேவி சிற்பத்தின் இடது புறத்தின் கீழ் செல்வக்குடம் காட்டப்பட்டுள்ளது. அதன் மீது தன்னுடைய இடது கையை தேவி வைத்துள்ளார். இச்சிற்பம் பல்லவர் காலத்தை சேர்ந்தவை ஆகும். இவை சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: ABP