'என் சாவுக்கு காரணம் கவுன்சிலர் தான்' - கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட கிராம ஊராட்சி செயலாளர்

வேலூர் அருகே ஊராட்சி செயலாளர் 'தி.மு.க கவுன்சிலர் தான் தன் சாவுக்கு காரணம்' என கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-05-14 12:01 GMT

வேலூர் அருகே ஊராட்சி செயலாளர் 'தி.மு.க கவுன்சிலர் தான் தன் சாவுக்கு காரணம்' என கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே ராமநாயனி குப்பத்தில் கிராம ஊராட்சி செயலாளராக 13 ஆண்டுகளாக பணியாற்றியவர் அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் இவருக்கு காந்திமதி என்ற மனைவியும், 2 வயது மகனும் உள்ளனர்.

இவரது தம்பி பிரவீன் குமாருக்கு நியாயவிலைக் கடையில் வேலை கேட்டு பெற்றுத்தர முயற்சி மேற்கொண்டுள்ளதாக அணைக்கட்டு ஒன்றிய கவுன்சிலரும், தி.மு.க பிரமுகருமான ஹரியிடம் இரண்டரை லட்சம் பணம் கொடுத்துள்ளார்.

பணம் கொடுத்து ஆறு மாதங்கள் ஆன நிலையில் இதுவரை வேலையும் வாங்கி தரவில்லை பணத்தையும் வாங்கி தரவில்லை தி.மு.க பிரமுகர் ஹரி.

மேலும் ஊராட்சி டெண்டர் பணிகளில் கமிஷன் கேட்டு ராஜசேகருக்கு ஹரி மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது, இந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் 12 லட்ச ரூபாய் கையாடல் செய்ததாக ராஜசேகர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக ராஜசேகரிடம் கடந்த வாரம் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ராஜசேகர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக கடிதம் ஒன்று எழுதியுள்ளார் அதில் 'தன் இறப்புக்கு தி.மு.க ஹரி கவுன்சிலர் காரணம்' என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தி.மு.க பிரமுகர் ஹரியை கைது செய்ய வலியுறுத்தி ராஜசேகரன் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Source - New 18 Tamil Nadu

Similar News