பணப் பட்டுவாடா செய்த தி.மு.க'வினர், பறக்கும் படையினரிடம் வசமாக சிக்கினர்!

Update: 2022-02-18 11:49 GMT

நாகர்கோயிலில்  உள்ளாட்சித் தேர்தலுக்காக தி.மு.க'வினர் பணப்பட்டுவாடா செய்ததையடுத்து, வசமாக  தேர்தல் பறக்கும் படையினரிடம்  சிக்கினர். 


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நாளை தேர்தல் நடக்க இருப்பதால் பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினரும்,  காவல்துறையினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தமிழகத்திலுள்ள பல பகுதிகளில் ஆளும் தி.மு.க'வுக்கு எதிராக மக்களின் மனநிலை இருப்பதால், தி.மு.க'வினர் பீதி அடைந்துவிட்டனர். ஆகையால் பல இடங்களில் தேர்தல் விதி மீறல்களில் தி.மு.க'வினர் ஈடுபட்டு வருகின்றனர்.


இதன்  வரிசையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் 12வது வார்டில், இன்று தி.மு.க'வினர் துண்டுப் பிரசுரங்களுடன் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தனர். இதனை கண்ட பொதுமக்கள் தேர்தல் பறக்கும் படையினருக்கும், காவல்துறையினருக்கும் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை தி.மு.க'வினரை விசாரிப்பதை தவிர்த்து, பொதுமக்களிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர்.


இதேபோன்று ஆனந்தம்பாலம் பகுதியில், தி.மு.க'வினர் பணம் பட்டுவாடாவில்  ஈடுபட்டிருந்தபோது, தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்கினர், பின்னர் அவர்களில் சிலர்   ஓட்டம் பிடிக்கவே, சிக்கியவர்களிடமிருந்து ரூபாய் 49 ஆயிரத்தை பறக்கும் படையினர் கைப்பற்றினர். 

இச்சம்பவம் நாகர்கோயிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://youtu.be/ORsFDDS5a1M

Similar News