தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கிய வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியர்கள் ஒப்பந்தத்தை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டம் நடந்து வருகின்றனர்.

Update: 2022-06-17 13:21 GMT

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியர்கள் ஒப்பந்தத்தை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டம் நடந்து வருகின்றனர்.

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 75 நிரந்தர பணியாளர்களும் 719 ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதத்தில் 26 நாட்கள் வேலை அளித்து அதற்கான ஊதியத்தை தினக்கூலி அடிப்படையில் நிர்வாகம் வழங்கி வருகிறது.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியத்தை நிர்வாகமே நேரடியாக வழங்கி வரும் நிலையில் அவர்களை தனியார் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து நிர்வாகத்தை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுகுறித்து பராமரிப்பாளர் ஆக 15 வருடங்களாக பணியாற்றி வரும் நிர்மலா என்பவர் கூறுகையில், 'இங்கிருக்கும் ஒவ்வொரு சிங்கம், புலி என நாங்கள் எந்த விலங்காக இருந்தாலும் அவைகளை குழந்தைகளாக கருதுகிறோம். எளிதில் யாரையும் இந்த இந்த பணியை ஒரே நாளில் செய்து விடமுடியாது. தொடர்ந்து எங்கள் உரிமைக்காக போராடி வருகிறோம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க தலைவர் பால்பாண்டி கூறுகையில், 'இங்கிருக்கும் ஒவ்வொரு ஒப்பந்த தொழிலாளர்களும் பலர் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருகிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட சூழலில் தினக்கூலியாக அரசாங்கத்திலிருந்து பெற்று வந்த நிலையில் தனியாரிடம் தாரை வார்த்துக் கொடுப்பது எனக்கு வருத்தமாக உள்ளது' எனவும் கூறினார்.


Source - ABP Nadu

Similar News