சட்டவிரோத பணப் பரிமாற்றம்: டி.எம்.பி. வங்கி முன்னாள் தலைவரின் சொத்துக்கள் முடக்கம்!
சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததன் மூலம் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் இயக்குநரின் ரூ.216.40 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் இயக்குநராக பணியாற்றியவர் எம்.ஜி.மாறன் என்கின்ற நேசமணி மாறன் முத்து. இவர் கடந்த 2014ம் ஆண்டு டி.எம்.பி. வங்கியின் 46000 பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்திருந்தார். இது தொடர்பாக புகார் எழுந்தது. புகாரை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதில் உண்மை தெரியவந்தது. இதனால் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
Source, Image Courtesy: Vikatan