தமிழக ஆளுநர் பெயரில் போலி இமெயில்: குற்றவாளிகளுக்கு போலீசார் வலை!

தமிழக ஆளுநரின் பெயரில் போலியான மின்னஞ்சல் மற்றும் ட்விட்டர் கணக்குகள் உருவாக்கியவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-10-18 02:21 GMT

தமிழக ஆளுநரின் பெயரில் போலியான மின்னஞ்சல் மற்றும் ட்விட்டர் கணக்குகள் உருவாக்கியவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: போலியான மின்னஞ்சல் முகவரியைச் சிலர் உருவாக்கி ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களைக் கொண்ட மின்னஞ்சலை அனுப்புவது பற்றித் தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


போலியான மின்னஞ்சல் உருவாக்கிய குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அலுவலக மின்னஞ்சல் govtam@nic.in என்றும், ட்விட்டர் @rajbhavan_tn கணக்கு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே வேறு போலி மின்னஞ்சல், போலி டுவிட்டர் கணக்குகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை போன்று முன்பு ஆளுநர்களின் பெயரிலும், பிரதமர் அலுவலகத்தின் பெயரிலும் போலி மின்னஞ்சல் அனுப்பிய 2 ஐஏஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Raj Bhavan, Tamil Nadu Twiter

Tags:    

Similar News