தமிழகத்தில் 99% மருத்துவமனைகளில் தீயணைப்பு பாதுகாப்பு விதி மீறல் - 110 ரூபாய் கோடி என்ன ஆச்சு?

Update: 2022-05-02 05:23 GMT

தமிழக மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில், மாநிலம் முழுக்க 99 சதவிகித மருத்துவமனைகளில் தீயணைப்பு பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளதாக, தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு குழுவின் உறுப்பினர் ஜவஹர்லால் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதற்காக 6000ஆயிரம் மருத்துவ மனைகள் ஆய்வு செய்யப்பட்டன. கட்டிடத்தை சுற்றியிருக்க வேண்டிய புறவழி பெரும்பலான மருத்துவமனைகளில் இல்லை. அங்கே வேறு கட்டுமானங்கள் நடைபெற்றுள்ளன. கட்டிடத்தின் அடிதளத்தை விதிகளுக்கு புறம்பாக பயன்படுத்துகின்றனர். அரசு தனியார் என எல்லா மருத்துவமனையிலும் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய ரூ12 கோடி அப்போது ஒதுக்கப்பட்டது. மாநிலத்தில் உள்ள பிற மருத்துவக் கல்லூரிகளுக்கும் சேர்த்து ரூ.110 கோடி மொத்தம் ஒதுக்கப்பட்டது. மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 75 கோடி ஒதுக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்ற மருத்துவ உபகரணங்களுடன் வைக்கப்பட்டிருக்க கூடாது. வெப்பம் அதிகமாக வெளியிடும் சமையலறை இந்த கட்டிடத்துக்கு அருகிலேயே உள்ளது என கூறினார். 

Inputs From: news18

Similar News