சென்னையில் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை! உற்சாகத்தில் நகர வாசிகள்!

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2021-08-27 13:19 GMT

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என சென்னை வானிலை மையம் கூறியிருந்தது. அதன்படி ஆகஸ்ட் 29, 30ம் தேதிகளில் தமிழகத்தில் அதிகமான மழை பெய்யும் என்பதால் அந்த இரண்டு நாட்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனிடையே இன்று காலை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருந்தது.

இந்நிலையில், சென்னையில் முக்கிய பகுதிகளான அயனாவரம், அண்ணாநகர், பெரம்பூர், கொரட்டூர், அம்பத்தூர், கோட்டுர்புரம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், சுற்று வட்டார பகுதிகளான புழல், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டித்தீர்த்து வருகிறது.

Source, Image Courtesy: Topnews

https://www.toptamilnews.com/heavy-rainfall-in-many-places-of-chennai/

Tags:    

Similar News