மூன்று மாதங்களில் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சிலை: மீட்பு போலீசார் அதிரடி!
கடந்த மூன்று மாதங்களாக வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு வந்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த மூன்று மாதங்களாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட வந்த சிலைகள் தற்போது மீட்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுகளுக்கு விற்பதற்காக 60க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து, மேலும் பத்திற்கு மேற்பட்ட சிலைகள் அவற்றில் தற்போது மீட்கப்பட்டுள்ளன என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியிருக்கிறார்கள். பல்வேறு இடங்களில் சுவாமி சிலைகள் மற்றும் பழமையான கோவில் சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்துதல் என்பது பெரும் தொழிலாகவே நடைபெற்று வருகின்றது.
குறிப்பாக சென்னையை மையமாக வைத்து பல்வேறு வெளிநாடுகளுக்கு இத்தகைய சிலைகளை கூட்டமாக கடத்தும் கும்பல்களும் தற்போது அதிகரித்து வருகிறது. இவற்றை தடுப்பதற்காக தமிழகப் போலீசார் தரப்பில் தனிக்குழுவும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் வெளி நாடுகளுக்கு கடத்தப்பட்ட 60 சிலைகளில் 10 சிலைகள் தான் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
தீவிர முயற்சிகளை மேற்கொண்டு அதன் பெயரில் மற்ற சிலைகளும் உடனடியாக ஈர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக டி.ஜி.பி ஜெயந்த் முரளி அவர்கள் கூறியிருக்கிறார். சிலை கடத்தும் கும்பல்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருக்கும் சிலைகளையும் இங்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Input & Image courtesy: Dinakaran news