இஸ்லாம் மதத்திலிருந்து விலகி இந்து மதத்தை ஏற்ற பெண்! தாய் மதத்திற்கு திரும்பியுள்ளதாக இந்து முன்னணி பாராட்டு!
ராமேஸ்வரத்தில் பெண் ஒருவர் இஸ்லாம் மதத்தில் இருந்து விலகி இந்து மதத்தை ஏற்றுள்ளார். அவரை பாராட்டி இந்து முன்னணி அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
அகிலம் முழுவதிலும் இந்து மத நம்பிக்கைகளை ஆதரிப்பவர்கள் அதிகரித்துக்கொன்டே வருகின்றனர். உலகத்திற்கு பல முக்கிய ஆன்மீக தத்துவ ஞானிகளையும், யோகக் கலைகளையும் பரிசாக அளித்து வருகிறது இந்தியா. இக்காரணத்தினால் ஆசிய அல்லாத பிற நாட்டவரிடம் இந்து மத நம்பிக்கைகள் வேரூன்றி வளர்ந்து வருகிறது.
ஆனால் இந்து மதத்தின் தாய் வீடான இந்திய நாட்டில், இந்து மத அடையாளங்களின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்கள் அரங்கேறி தான் வருகிறது. அதனால் இன்றும் கூட இந்து மதத்தில் இருப்பவர்களுக்கே அவர்களது மதத்தின் மேன்மையை அறியாமலேயே போகும் சூழல் அமைந்து விடுகிறது.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் நஸ்ரின் ஐனுஹா என்ற இஸ்லாமிய பெண் கண்ணகி என்று பெயர் மாற்றம் செய்து இந்து மதத்தை ஏற்றுள்ளார். அவர் தாய் மதத்துக்கு திரும்பியுள்ளதாக அவரை பாராட்டி இந்து முன்னணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : நஸ்ரின் ஜனுஹா இஸ்லாம் மதத்தில் இருந்து கண்ணகியாக தாய் மதம் திரும்பிய சகோதரியை வாழ்த்தி வரவேற்போம்.