தூத்துக்குடியில் பள்ளி கட்டிடத்தை தகர்த்து சட்டவிரோத ஜெபக்கூட்டம் கட்டிய மதமாற்ற கும்பலை எதிர்த்து பொதுமக்கள் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக பொது இடங்களில் மக்களை கவரும் வகையில் சட்டவிரோத மதமாற்ற கும்பல் ஜெபக் கூட்டங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மடத்தூர் பகுதியில், அரசுக்கு சொந்தமான இடத்தில் பள்ளி கட்டிடம் இருந்தது. அப்பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு மதமாற்ற கும்பல் சட்டவிரோதமாக ஜெபக்கூடம் கட்டியதாக புகார் எழுந்தது. இச்செயலை அப்பகுதி பொதுமக்கள் முற்றிலும் எதிர்த்து வந்தனர்.
இதனையெடுத்து இந்து முன்னணியினர் இப்பிரச்சனையை கையில் எடுத்தனர். பின்பு பொதுமக்களும் இந்து முன்னணியினரும் அதிகாரிகளுக்கு ஒருசேர புகார் மனு அளித்ததன் விளைவு, ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, இதுகுறித்து இந்து முன்னணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
தூத்துக்குடி மாவட்டம் மடத்தூரில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் இருந்த பள்ளியை இடித்து சட்ட விரோத ஜெபக்கூடம் கட்டியதை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் இந்துமுன்னணியினர் புகார் மனு விசாரணை செய்ய ஆர்.டி.ஓ உத்தரவு.