கோயிலில் பசுமையை பாதுகாக்கும் வகையில் மூலிகை மற்றும் அரிய வகை மரங்களை பக்தர்களே நட்டு பராமரித்து வருகின்றனர். இதனால் நந்தவன பகுதி மிகவும் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மாறியுள்ளது.
நெல்லை மாவட்டம், களக்காட்டில் 11ம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட மன்னரால் கட்டப்பட்ட சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் வரலாற்று சிறப்புமிக்க சிறப்புகளுக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். இதனிடையே கோயிலில் வெளிப்பிரகாரத்தில் முன்னர் காலத்தில் நந்தவனம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் காலம் மாறியதால் அங்கு இருந்த நந்தவனம் மறைந்து போனது (அழிந்துவிட்டது) என்றே கூறலாம்.
இந்நிலையில், கோயிலுக்கு வருகின்ற பக்தர்கள் சிலர் பழமையை மறுபடியும் கொண்டுவரும் நோக்கத்தில் புதிய நந்தவனத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டர். அதன்படி களத்தில் இறங்கிய பக்தர்கள் மரங்களை நட்டு பராமரிக்கத் தொடங்கினர். அங்கு அனைத்து வகையிலனா மரக்கன்றுகளையும் நட்டு பராமரித்தனர். பல்வேறு மூலிகை மரக்கன்றுகள் மற்றும் அரிய வகை செடிகளை நட்டு பாதுகாத்து வருகின்றனர். இதனால் சிறிய காடு போன்ற தோற்றம் கோயில் முன்பாக உருவாகியுள்ளது. கோயிலுக்கு வருகின்ற பக்தர்கள் நந்தவனத்தை பார்வையிட்டு செல்லும் வகையில் பக்தர்களின் முயற்சி அமைந்துள்ளது.
Source, Image Courtesy: News 7 Tamil