கோவை நகர், புறநகர் பகுதிகளில் டெங்கு பரவல் அதிகரிப்பு: அதிர்ச்சி தகவல்!
கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. டெங்கு வைரஸ் ஏடீஸ் கொசுக்களினால் பரவுகிறது. டெங்கு வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளாட்சி துறை, பள்ளிக்கல்வி துறையுடன் சுகாதாரத்துறையும் இணைந்து பணியாற்றி வருகிறது.

இது பற்றி மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் கூறும்போது: கோவை நகரில் ஒரே மாதத்தில் டெங்கு காய்ச்சலால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துகின்ற வகையில் சுகாதாரத்துறை சார்பில் 12 வட்டாரங்களில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், சுகாதாரத்துறை அலுவலர், ஆய்வாளர் என்று உள்ளனர்.
Source, Image Courtesy: Daily Thanthi