வெள்ளிமலை ஆசிரமம் குறி வைக்கப்படுகிறது எதனால்? - அர்ஜூன் சம்பத் வெளியிட்ட பகீர் அறிக்கை!

Update: 2022-05-12 08:01 GMT

கன்னியாகுமாரி மாவட்டம் வெள்ளிமலை பால சுப்பிரமணிய திருக்கோவில் ஆலய முன்னேற்ற சங்க கட்டிடம் - (சஸ்டி மண்டபம்) பல ஆண்டு சிதிலமடைந்து காணப்பட்டதால் பக்தர்களின் நிதி உதவியோடு 11.3.2004 -ம் ஆண்டு புனரமைக்கப்பட்டு இந்து அநிலைய துறை ஆணையாளர் தனபால் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த மண்டபத்தை திருவிழா மற்றும் ஆலய வளர்ச்சிக்காக பக்தர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்து அநிலைய துறை அதிகாரிகள் திடீரென பக்தர்கள் பயன் படுத்த முடியாத நிலையில் சீல் வைத்து பூட்டி சென்றுள்ளனர். 

இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டதில் வெள்ளிமலை முருகன் கோயில் மிக பிரசித்தம். சுற்றிலும் வயல்வெளியும் தென்னந்தோப்புமாக கொள்ளை அழகுடன் இருக்கும் அங்குள்ள முருகன் கோயில். இங்கு காலம் காலமாக ஒரு ஆசிரமம் உள்ளது.

வெள்ளிமலை ஆசிரமம் என்று சுற்றுவட்டார மக்களால் அன்போடும், மரியாதையாகவும் அழைக்கப்படும் விவேகானந்த ஆசிரமம் இங்குள்ளது . 1940-இல் தைப்பூசத் திருநாளில் ஆரம்பிக்கப்பட்டது.

அந்த ஆசிரமத்தின் தற்போதைய நிர்வாகி சுவாமி சைதன்யாநந்தா.சிறுவயது முதல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தொடர்புடையவர். பட்டப் படிப்பு முடித்த பிறகு சுவாமி மதுரானந்தரின் அன்பால் ஈர்க்கப்பட்ட சுவாமி சைதன்யாநந்தர், தன்னை ஸ்ரீ விவேகானந்தா ஆசிரமத்தில் இணைத்துக் கொண்டார். 1998ம் ஆண்டு முதல், ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பேற்று செயலாற்றி வருகிறார்.

கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சிலும், முஸ்லிம்களுக்கு மதரஸாவிலும் மதம் போதிக்கப்படுகிறது. ஆனால் ஹிந்துகளுக்கு முறையாக மதத்தைப் போதிக்கக்கூடிய அமைப்பு இல்லை. ஹிந்துகளும் தங்கள் மதத்தைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ளாததே இதற்கு காரணம் என்று இந்த ஆசிரமதில் ஐந்து நிலை கொண்ட பாடத்திட்டத்தினை உருவாக்கி பாடங்களும், தேர்வுகளும் நடத்தி பட்டம் வழங்கப்படுகிறது.

பட்டம் பெறும் மாணவர்கள் தனது பெற்றோருக்கு பாதபூஜை செய்து, அக்னி சாட்சியாக, "நான் இந்து சமுதாயத்திற்காகப் பாடுபடுவேன். பிரசாரம் செய்வேன்" என உறுதி எடுத்துக்கொண்டு பட்டம் பெறுகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய அளவில் இந்துக்கள் எழுச்சி பெறவும் ஆர்எஸ்எஸ் வளரவும், அதன் மூலம் மத மாற்றத்தை தடுக்கவும் இந்த ஆசிரமமே முக்கிய காரணம். நிறைய இளைஞர்களை இந்துத்துவவாதிகளாகவும் பிரம்மசரிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களாகவும் மாற்றிய பெருமை இந்த ஆசிரமத்தையே சேரும்.

அப்படி ஒரு வரலாற்றை கொண்டது ஆசிரம மண்டபம் இன்று அறநிலையதுறையால் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.அது ஆசிரமம் என்ற பெயரை மறைத்து பக்தர்கள் முன்னேற்ற சங்க கட்டிடம் என்று குறிப்பிட்டிருக்கிறது அறநிலைய துறை.

ஆசிரமத்திற்கும் கட்டிடத்திற்கும் வித்தியாசம் இல்லையா?

இந்த கட்டிடம் 2004 ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியின் போது அறநிலையத்துறை மற்றும் பக்தர்களால் புணரமைக்கப்பட்டு சஷ்டி மண்டபம் என்ற பெயருடன் புது பொலிவுடன் திறக்கபட்டது.

இந்த மண்டபத்தில் சஷ்டி நேரத்தில் ஆன்மீக சொற்பொழிவுகளும், இதர நேரங்களில் ஆன்மீக வகுப்புகள் சாகா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கு முழு ஆதரவு ஆசிரம சாமியார்கள்.

அந்த மண்டபம்தான் எந்த முன் அறிவிப்பும் காரணமும் இன்றி மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இது அறநிலையத்துறை மட்டும் சம்பந்தபட்ட பிரச்சனை அல்ல. இதை பின் இருந்து இயக்குபவர்கள் மி(வி)ஷன(நரிகள் என்பது சிறு குழந்தையும் அறியும்.

ஆசிரமத்தை மூடி சீல் வைத்துவிட்டால் ஆசிரம செயல்பாடுகளை முடக்கி விடலாம் என்பது இவர்கள் எண்ணம், திட்டமும் கூட. அதன் முயற்சியே இந்த சீல் வைப்பு வைபவங்கள்.

ஒருபக்கம் தருமபுர ஆதீன பட்டின பிரவேச தடை. இன்னொரு பக்கம் இது. ஆக ஒரே நேரத்தில் மடங்கள் ஆசிரமங்கள் அத்தனையும் குறி வைக்கப்படுகிறது.

தமிழகத்தில் இந்து சமயத்தையும் இந்துக்களையும் அழிக்க ஒரு சாத்தான் கும்பல் களமிரங்கியுள்ளது. அதற்கு இந்த விடியல் அரசும் அறநிலையதுறை என்னும் முகமூடியை மாட்டிகொண்டு துணை போகிறது.

இது நாள் வரை தானுண்டு தங்கள் ஆன்மீக பணியுண்டு என்றிருந்த மதுரை ஆதீனம், மன்னார்குடி ஜீயர்,விவேகானந்தா ஆசிரமகுரு, என்று காவி துறவிகள் ஒவ்வொருவராக இந்து துவேஷ நடவடிக்கைக்கு எதிராக களமிறங்குவது சாதாரணமாக படவில்லை என்று கூறியுள்ளார். 

Similar News