கார்த்திக் சிதம்பரம் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் கோஷிட்டிகள் அடிதடி ! இருக்கைகள் பறந்தன !
காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல் புதிதல்ல அதுவும் தமிழக காங்கிரஸ் கட்சியில் சொல்லவா வேணும்.. பல துண்டுகளாக பிரிந்து கிடக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே.
காங்கிரஸ் கட்சி தேசிய அளவிலும் சரி மாநில அளவிலும் சரி வலுவிழந்து உள்ளது. ஏதோ தமிழகத்தில் மட்டும் தி.மு.க விடம் தொற்றிக்கொண்டு தன் இருப்பை தமிழக அரசியலில் தக்க வைத்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல் புதிதல்ல, அதுவும் தமிழக காங்கிரஸ் கட்சியில் சொல்லவா வேணும்.. பல துண்டுகளாக பிரிந்து கிடக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த உட்கட்சி பூசல் கட்சிக்கு அப்பால் வெளியில் தெரியும்படி இருந்தது இல்லை, ஆனால் சமீப காலமாக காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசல்கள் வெளிப்படையாக அரங்கேறி வருகின்றனர்.
சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்தின்போது இருக்கைகளை எறிந்து கட்சியின் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
A.N.I டுவிட்டர் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டது அந்த வீடியோவில் கட்சியின் இரு பிரிவுகளுக்கு இடையே அடிதடி சண்டை மற்றும் இருக்கைகளை எரியும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
எதிர் வரக்கூடிய ஊரக உள்ளாட்சி தேர்தலை பற்றி கலந்தாலோசிக்க சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தது. அப்பொழுதுதான் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
சட்டீஸ்கர் ராஜஸ்தான்மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல் கொடிகட்டி பறக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற மிகப்பெரிய உதாரணம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசலால் கேப்டன் அமிரிந்தரர் சிங் முதல்வர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.