கீழடி 7ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் உரை கிணறுகள் கண்டுபிடிப்பு !

சிவகங்கை மாவட்டம், கீழடி 7ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் ஒரே அகழாய்வு குழியில் 3 உரை கிணறுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-17 05:15 GMT

சிவகங்கை மாவட்டம், கீழடி 7ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் ஒரே அகழாய்வு குழியில் 3 உரை கிணறுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் வாழ்வியல் முறை, நம்பிக்கை, கலாச்சாரம், இன மரபியல் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளும் வகையில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாவு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் 20க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அகரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் ஒரே குழியில் 3 உரை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 3 அடுக்கு கொண்ட ஒரு உரை கிணறும், 2 அடுக்க கொண்ட இரண்டு உரை கிணறும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: News 7


Tags:    

Similar News