அமைச்சர் கே.என் நேருவை வரவேற்க , ஒரு மணி நேரம் காலனி இல்லாமல் சாலையோரம் காக்க வைக்கப்பட்ட பள்ளி மாணவிகள் !

Update: 2021-12-01 13:37 GMT

திருச்சியில் அமைச்சர் கே.என் நேருவை வரவேற்க,  பள்ளி  மாணவிகளை  சாலையோரம் நெடு நேரம் கால் கடுக்க காத்திருந்தது, அப்பகுதி மக்களையும்,மாணவிகளின்  பெற்றோர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக திமுக என்றாலே ஆடம்பரம் என்று கூறுவார்கள். தி.மு.கவின் உள்ளூர் முக்கிய புள்ளிகள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு கழகத் தொண்டர்கள்  எல்லாவித வரவேற்பு ஆடம்பரங்களை  செய்வார்கள்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம்,  போட்டப்பாளையத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சிமன்ற கட்டிடத்தை அமைச்சர் கே.என் நேரு  திறக்க  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் வருகையின்போது அவரது கெத்தை நிலைநாட்ட அப்பகுதி பெண்கள் மேல்நிலைப்  பள்ளி நிர்வாகம், அப்பள்ளி  மாணவிகளை சாலையோரம் காலனி இல்லாமல் அமைச்சரை வரவேற்க ஒரு மணி நேரம்  காத்திருக்க வைத்தது , இச்சம்பவம்  அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவிகளின்  பெற்றோர்கள்  கோபமுற்றனர். 

Image : Republic

Similar News