அரசாங்க பள்ளிகளில் மும்மொழி விருப்பப்பட்டால் படிக்கலாம் - பிடிவாதத்தை விட்டு இறங்கி வரும் தி.மு.க!

Update: 2022-05-16 08:56 GMT

தமிழக அரசு தன்னுடைய மொழிக் கொள்கையை பல்வேறு காலகட்டங்களில் தெளிவுப்படுத்தியுள்ளது. தாய்மொழியாகிய தமிழ், உலகத்திற்கான இணைப்புமொழியாக ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை மட்டுமே வழக்கத்தில் இருந்து வருகிறது.

2006 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டத்தின்படி ஒவ்வொரு மாணவரும் பத்தாம் வகுப்பு வரை தமிழ்மொழியை கட்டாயப் பாடமாக கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனினும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது என தமிழை தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்களும் தமிழ் மொழியுடன் சேர்த்து, அவர்களது தாய்மொழியையும், விருப்பப்பாடமாகப் படித்து, தேர்வு எழுதும் முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், அரசாங்க பள்ளிகளில் மும்மொழி விருப்பப்பட்டால் படிக்கலாம் என தெரிவித்துள்ளார். 

அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படுவதாகவும் கூறியுள்ளார். இரு மொழிக்கொள்கையில் தீவிரமாக இருந்த திமுக தற்போது பிடிவாதத்தை தளர்த்தி வருகிறது. 


Similar News