ராணிப்பேட்டை அருகே கடிதம் எழுதி வைத்துவிட்டு திருடிய பணத்தை கோவில் உண்டியலில் போட்ட திருடன் - அதற்காக சொன்ன காரணம்!

Update: 2022-06-23 12:24 GMT

ராணிப்பேட்டை அருகேயுள்ள புராணப்பெருமை மிக்க காஞ்சனகிரி மலையில் 1,008 சுயம்பு லிங்கங்கள், காஞ்சனகிரீஸ்வரர் சந்நிதி, விநாயகர் மற்றும் ஐயப்பன் சந்நிதிகள் அமைந்துள்ளன.

அங்குள்ள கோவில் உண்டியல் திறக்கப்பட்ட போது, ஒரு கடிதமும், பத்தாயிரம் ரூபாய் பணமும் இருந்தது. அந்தக் கடிதத்தில், என்னை மன்னித்து விடுங்கள். நான், சித்ரா பௌர்ணமி கழிந்த மறுதினம் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி விட்டேன்.


அப்போதிலிருந்து எனக்கு மனசு சரியில்லை. நிம்மதியில்லை. அப்புறம் வீட்டில் நிறையப் பிரச்னை வந்தது. எனவே, மனம் திருந்தி எடுத்தப் பத்தாயிரம் ரூபாய் பணத்தை அதே உண்டியலில் போட்டுவிட்டேன். எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள். கடவுள் என்னை மன்னிப்பாரா தெரியாது என்று எழுதப்பட்டிருந்தது. இது குறித்து, கோயில் நிர்வாகிகள் சிப்காட் போலீஸாரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். 

Input from: Vikadan 

Similar News