சொன்னதை செய்த மதுரை ஆதீனம்! பிரதமர் மோடியை சந்தித்தார் - அப்பொழுது கூறியது என்ன?
முப்பத்தி ஒரு ஆயிரம் கோடி ரூபாயை நலத்திட்டங்கள் வழங்க தமிழகம் வருகை தந்த முதல்வரை மதுரை ஆதீனம் சந்தித்து பேசியுள்ளார்.
முப்பத்தி ஒரு ஆயிரம் கோடி ரூபாயை நலத்திட்டங்கள் வழங்க தமிழகம் வருகை தந்த முதல்வரை மதுரை ஆதீனம் சந்தித்து பேசியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலை துறையின் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது இந்த நிலையில் தமிழக மக்களுக்காக நலத்திட்டங்களை அர்ப்பணிக்க பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தார்.
தமிழகம் வந்த மோடி பிரதமர் மோடிக்கு தமிழக பா.ஜ.க சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் அவரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது, இதில் தமிழ்நாட்டுக்கு ஆறு முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்த நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்பொழுது தமிழ்நாட்டைப் பற்றியும் தமிழர்களைப் பற்றியும் மிகவும் உயர்வாக பேசினார்.
மேலும் இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் அத்தியாவசிய உதவிகளை பற்றி பட்டியலிட்ட மோடி தனிநபர்கள் இந்திய அமைப்புகள், இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதி, மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட அந்நாட்டில் இருக்கும் சகோதர சகோதரர்களுக்கு இன்னும் உதவி செய்ய தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி நிறைவடைந்து பிரதமர் மோடி டெல்லி திரும்ப சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் அங்கு பிரதமர் மோடியை மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் சந்தித்துப் பேசினார். தருமபுர ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியர் கண்டனம் தெரிவித்து சில நாட்களுக்கு முன்பு பேசிய மதுரை ஆதீனம் 'தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பேன்' எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.